சனி, 28 ஜனவரி, 2012

3 முதல் 5 வயது வரை

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்


இந்தப் பருவம் பள்ளி செல்லும் பருவம். குழந்தைகள் அழகாக பள்ளி சீருடைகள் அணிந்து அ , ஆ , இ ஈ எனவும் A, B , C  D  எனவும் 1, 2, 3, 4 எனவும் பயிலும் நேரம். நம் வீட்டுச்  சூழ்நிலையை தவிர பிற குழந்தைகள், மனிதர்கள் என்று பலருடனும் பழகும் வாய்ப்பு கிடைக்கும் காலம். இந்தப் பருவத்தில் தான் குழந்தைகள் விட்டு கொடுக்கும் பழக்கம் மட்டுமல்லாமல் தன்னிடம் அன்பு மட்டுமே காட்டுபவர்களை தாண்டி மற்ற மனிதர்களிடம் பழக தெரிந்துகொள்ளும் காலம். அவர்களைப்  பொறுத்த மட்டில் அவர்கள் புது உலகத்திற்குள் அடி எடுத்து வைப்பதை  போல உணரும் காலம். பெற்றோரான நாம் தான் தினமும் அவர்களுக்கு இந்த வித்தியாசத்தை மெதுவாக எடுத்துக்கூறி இந்த உலகத்தை அறிமுகப் படுத்தவேண்டும். 

தான் கேட்டது அனைத்தும் கிடைக்கிற ஓர் குழந்தைக்கு பள்ளியில் கேட்டது கிடைக்காததோடு புதிதாக இதை செய், இதை செய்யாதே, இங்கு நிற்காதே என்பது போன்ற கட்டளைகளும் கேட்கிறபோது மிரண்டு போகிறான். இதனால் தான் பள்ளிக்கு செல்ல மறுப்பும் சொல்வார்கள் குழந்தைகள். உடனே பள்ளிக்கு போய்  தான் ஆக வேண்டும் என்று அவர்களை திட்டி அடித்து அனுப்பும் பெற்றோர் பலரை நாம் காண்கிறோம். இதனால் குழந்தைக்கு மேலும் பயம் அதிகரிப்பதோடு படிப்பு என்பதும் குழந்தையை பயமுறுத்தும்.

இதை தவிர்க்க பெற்றோர் தினமும் குழந்தையுடன் ஒரு அறை மணி நேரமாவது செலவிட்டு குழந்தை பள்ளிக்கு சென்றது முதல் திரும்பி வந்தது வரை என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு தைரியம் அளிப்பதோடு அவனுக்கு மற்றவர் ஏன் (அது அவர்களுடைய ஆசிரியையாக கூட இருக்கலாம்) அவர்களிடம் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை விளக்கினால் அவர்களும் புரிந்துகொண்டு சந்தோழமாக பள்ளிக்கு செல்வதோடு, படிப்பிலும் ஆர்வம் காட்டுவர்.  இதனால் நம்  பிள்ளை பள்ளியில் முதல் மாணவனாகவோ, மாணவியாகவோ கூட திகழலாம்.

இதையெல்லாம் தாண்டி நாங்கள் இங்கு கூறியுள்ள சில பயிற்சிகளையும் சொல்லிகொடுத்தால் உங்கள் குழந்தை பயத்தை உதறிவிட்டு எதிர்கால ஒளி  விளக்காகவும் திகழ்வான்.

மேலும் இவற்றை தங்கள் குழந்தைகளுக்கு காண்பிப்பதுடன் இது போன்ற விரிவான பல பயிற்சிகளை  பெற தொடர்புகொள்ளவும்

natchatthirangal@gmail.com 

செல்பேசி எண் - 91769 67377


வாழ்க வளமுடன் 

இந்த வீடியோக்களை  குழந்தைகளுக்கு காண்பிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:-


  • உங்கள் கம்ப்யூட்டர் டேபிள்-ஐ சுத்தமாக வைக்கவும். இது குழந்தையின் கவனம் வேறு எதிலும் திரும்பாமல்  பார்த்துக் கொள்ளும்.
  • அருகில் எந்த விளையாட்டு பொம்மையும் வேண்டாம். ஏனெனில் இவை குழந்தையின் கவனத்தை திசை திருப்பகூடியவை .
  • கீழே உள்ள சில வீடியோக்களில் உள்ளது போல தங்கள் குழந்தையை தங்களின் மடி மீது அமர்த்திகொண்டு குழந்தையிடம் கொஞ்சிப் பேசுங்கள்.
  • இந்த படங்களை காட்டும் போது குழந்தையின் கவனம் பிறரின் மேல் செல்லாமல் இருக்க தங்களையும், தங்களின் குழந்தையும் தவிர வேறு யாரும் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • நாம் படம் பார்க்கலாமா என்று கூறியபடி கம்ப்யூட்டர்-ஐ on செய்யுங்கள். இவ்வாறு ஒவொரு தடவையும் செய்யும்போது குழந்தையீன் உற்ச்சாகம் பல மடங்கு அதிகரிக்கும்.

    இந்த வீடியோக்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முன் அவற்றைப் பற்றி குழந்தையோடு குழந்தையாக  அமர்ந்து சிரித்துப் பேசுங்கள். தாங்கள் என்ன குழந்தைக்கு சொல்லிகொடுக்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள். பின்னர் இவற்றை காண்பியுங்கள்.  பிறகென்ன உங்கள் குழந்தை பள்ளியில் முதலிடம் தானே.

    சில எடுத்துக்காட்டுக்கள்:-

    நாங்கள் இங்கு சில தலைப்புகளில் சிலவற்றை மட்டும் காண்பித்து உள்ளோம். இவற்றை இதே வரிசையில் காண்பிப்பதை விட ஒவ்வொரு  தடவையும் கலைத்து மீண்டும் காண்பித்தால் இன்னும் வேகமான வளர்ச்சியை தங்களின் குழந்தையிடம் காணலாம். அவ்வாறு காண்பிப்பதன் மூலம் இந்த தடவை அம்மா என்ன காண்பிக்க போகிறார்கள் என்கிற ஆர்வத்தை குழந்தையிடம் தூண்டுவதோடு அவர்களின் ஜாபக  சக்தியையும் வளர்க்க முடியும்.

    இது போன்ற விரிவான பல தகவல்களுக்கு தாங்கள் அணுகவேண்டிய முகவரி

    natchatthirangal@gmail.com   


    எண்கள் - Numbers :-

    முதலாவது நாள்:-

    இரண்டாவது நாள்:-
    மூன்றாவது நாள்:-

    கூட்டல் - Addition :-

    முதல் நாள்:-
    இரண்டாவது நாள்:-
    மூன்றாவது நாள்:-

    கூட்டல்(படங்களைக் கொண்டு) - Addition by Pictures:-

    முதல் நாள்:-
    இரண்டாவது நாள்:-
    மூன்றாவது நாள்:-

    ஆங்கில எழுத்துக்கள் - Alphabetical  Letters:-

    முதல் நாள்:-
    இரண்டாவது நாள்:-
    மூன்றாவது நாள்:-

    ஆங்கில சொற்கள் - Alphaabetical Words:-

    Apple:-
    Banana:-
    Cat:-
    Elephant:-
    Flag:-


    இதன் மூலம் குழந்தையின் அறிவுத்திறன் மட்டும் வளரவில்லை. குழந்தையின் கவனிக்கும் திறன் வளர்கிறது. இதனால் சுற்றுச் சூழலில் நடப்பவற்றை உடனுக்குடன் கிரகிக்கும் திறன் அதிகரிக்கிறது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதனால் ஏற்படும் இன்னும் பல நன்மைகளை நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதை விட இந்தப் பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்றுகொடுப்பதன் மூலம் அதன் நன்மைகளை நேரில் உணர்வீர்களாக.

    எங்கள் வலைதளத்தை பின்பற்றி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.

    வாழ்க வளமுடன்.

    மேலும் இவை போல் விரிவான பயிற்சிகளை பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்

    natchatthiriangal@gmail.com


    இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

    வாழ்க வளமுடன்

    மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 


    natchatthirangal@gmail.com


    வாழ்க வளமுடன்